அடடடே... இப்படியே கல்யாண போட்டோ, குழந்தை போட்டோன்னு அடிச்சுவுடு தல!
தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள்.
இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என கடுப்பாகின்றனர். அந்த அளவிற்கு லூட்டியடிக்கும் இந்த ஜோடி புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருக்கிறார்கள். ஆனால் ஊர்சுற்றும் நெருக்கமான புகைப்படங்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி பலரையும் புகைய வைத்துவிடுகிறது.
மேலும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் செய்தி வெளியாகி கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது. அடிக்கடி டேட்டிங் செல்லும் இவர்கள் தற்போது கொரோனா ஊரடங்கினாள் வீட்டில் இருந்தபடியே காதலில் மூழ்கி கிடக்கின்றனர். ஆனால் வேலை வெட்டி இல்லாத சில ஆசாமிகள் இவர்களுக்கு கொரோனா வந்துவிட்டது என புரளியை கிளம்பிவிட்டனர்.
இதனால் கடுப்பான இருவரும் ஒரே வீட்டில் ஜாலியாக இருக்கும் வீடியோ புகைப்படங்களை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வருகின்றனர். இருவரும் குழந்தைகள் போல் எக்ஸ்பிரஷன் கொடுத்த கியூட் வீடியோவை நயன் வெளியிட்டதை தொடர்ந்து தற்ப்போது விக்னேஷ் சிவன் நயனுக்கு Forehead kiss
கொடுத்த பழைய புகைப்படமொன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதற்கு நயன் வெட்கத்துடன் கமெண்ட் செய்ய இணையவாசி ஒருவர் " இப்படியே கல்யாண போட்டோ, குழந்தை போட்டோ , அடிக்கடி அடிச்சுவுடு தல" என கிண்டலாக கமெண்ட் செய்துள்ளார்.