அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறதா ?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்திற்குப் பிறகு , நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இதில், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் போன்ற மிகப்பெரும் நட்சத்திரப்பட்டாளம் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பிரச்சனையினால் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த ஷுட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் தீபாவளிக்கு ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்ட அண்ணாத்த படம் அடுத்த பொங்களுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா நிலவரம் சரியாகி மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பினாலும் தியேட்டர்கள் திறக்க தாமதம் ஆகும் என்பதால் மீண்டும் அண்ணாத்த படம் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாகவும் அதனால் அடுத்தாண்டு கோடை விடுமுறையில்தான் இப்படம் ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகிறது.