செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 13 ஜூன் 2020 (17:04 IST)

அம்மன் நயன்தாராவை வீட்டில் வைத்து கும்பிடும் ரசிகர் - வைரல் புகைப்படம்!

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா அம்மன் அவதாரமெடுத்து மூக்குத்தி அம்மன் படத்தில் என்ற படத்தில் நடித்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்துள்ளது. வெறும் 50 நாட்களில் நாகர்கோவிலில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடத்தி முடித்தனர்.

இதனை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அம்மன் தோற்றத்தில் கையில் வேல் ஏந்தி இருந்த நயன்தாராவை பார்த்து அவரது ரசிகர்களே கும்பிடு போட்டனர்.


சமீபத்தில் கூட நயன்தாராவின் அம்மன் கெட்டப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலானது. இந்நிலையில் நயன்தாரா வெறியன் ஒருவர் தன் வீட்டு பூஜை அறையில் சாமியோடு சாமியாக நயன்தாராவின் அம்மன் புகைப்படத்திற்கு மாலை போட்டு கூப்பிட்டு வரும் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாக அதனை மீம்ஸ் போடு வைரலாகியுள்ளனர் நம்ம மீம்ஸ் பாய்ஸ்.. இதோ அந்த பக்தனின் பக்திமயமான செயல்...