1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (11:42 IST)

பனாமா பேப்பர்ஸால் சிக்கிய ஐஸ்வர்யா ராய்! – அமலாக்கத்துறை நோட்டீஸ்!

பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் ஐஸ்வர்யா ராயின் பெயரும் அடிபட்ட நிலையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக உலக அளவில் பல்வேறு நாடுகளில் சொத்து குவித்த பிரபலங்கள் குறித்து பனாமா பேப்பர்ஸ் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பனாமா பேப்பர்ஸ் ஆவணங்களில் இந்திய நடிகையான ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட பலரது பெயர்களும் இடம்பெற்றிருந்தன. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய அமலாக்கத்துறை ஐஸ்வர்யாராய் பச்சன் மற்றும் அவரது சகோதரருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.