செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (14:01 IST)

தளபதி 65 ல் நான் இல்லை… ஆனா ஐ ஆம் வெயிட்டிங்! பாலிவுட் நடிகர் டிவீட்!

விஜய் நடிக்கும் அவரின் 65 ஆவது படத்தில் வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்மால் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக தளபதி 65 இருக்கிறது. இந்த படத்துக்கான கதாநாயகிகள் தேர்வு மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு எல்லாம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. கதாநாயகியாக பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா, நகைச்சுவை பாத்திரத்தில் யோகி பாபு ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக துப்பாக்கி பட வில்லன் வித்யுத் ஜமால் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. விஜய்க்கும் வித்யுத்துக்கும் இடையிலானக் காட்சிகள் துப்பாகி படத்தில் பெரிதும் பேசப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதை வித்யுத் ஜம்மால் மறுத்துள்ளார்.

இது சம்மந்தமாக ஒரு டிவீட்டில் ’விஜய்யுடன் நடிக்க ஐ ஆம் வெய்ட்டிங்… ஆனால் இந்த செய்தியில் உண்மையில்லை’ எனக் கூறியுள்ளார்.