உலகின் மோதவேக் கூடாத மனிதர்கள் பட்டியலில் துப்பாக்கி வில்லன்!

Last Modified செவ்வாய், 21 ஜூலை 2020 (16:40 IST)

துப்பாக்கி மற்றும் பில்லா படங்களில் வில்லனாக நடித்த வித்யுத் ஜமாலுக்கு உலகளாவிய அங்கீகாரம் ஒன்று கிடைத்துள்ளது.

பாலிவுட் நடிகரான வில்லன் நடிகர் வித்யுத் ஜமால் தனது கட்டுக்கோப்பான உடலாலும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். மேலும் களரிபயட்டு எனும் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் தேர்ச்சி பெற்றவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் இப்போது உலகின் மோதவே கூடாத நபர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர் ஆவார். இந்த பட்டியலில் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் க்ரில்ஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இதில் மேலும் படிக்கவும் :