வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 8 மே 2019 (18:37 IST)

மனித கம்ப்யூட்டர் சகுந்தலாதேவி கேரக்டரில் அஜித் மனைவி!

கணித மேதை சகுந்தலாதேவி என்றாலே உலகமே ஆச்சரியமாக வாயை பிளந்து பார்க்கும். கம்ப்யூட்டரை விட வேகமாக கணக்கு போடும் சகுந்தலாவின் கணித அறிவின் திறமையை வியக்காதவர்கள் யாரும் இல்லை. சிறு வயதில் இருந்தே இருக்கும் அவருடைய கணித அறிவை கடவுள் கொடுத்த வரமாக அனைவரும் கருதினர்.
 
இந்த நிலையில் கணித மேதை சகுந்தலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் பாலிவுட்டில் தயாராகவுள்ளது. இதில் சகுந்தலாதேவி கேரக்டரில் வித்யாபாலன் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்தவர் என்பதும் பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகை என்பதும், தேசிய விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தில் நடிப்பது குறித்து வித்யாபாலன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் கணிதமேதை சகுந்தலாதேவி கேரக்டரில் நடிப்பது தனக்கு நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்றும், இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் அனுமேனன் அவர்களுக்கும், தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ரா அவர்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்,.