திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (13:27 IST)

’விடாமுயற்சி’ படப்பிடிப்பில் பிரபலம் மாரடைப்பால் மரணம்.. படக்குழுவினர் அதிர்ச்சி..!

அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக அஜர்பைஜான் என்ற நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த முக்கிய பிரபலம் ஒருவர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் பட குழுவினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அஜித் நடித்த வரும் ’விடாமுயற்சி’  படத்தின் கலை இயக்குனராக  மிலன் என்பவர் பணியாற்றி வந்தார்.

இன்று காலை மிலன் படப்பிடிப்புக்கு சென்று கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணம் அடைந்தார். அவரது மறைவை அடுத்து அதிர்ச்சி அடைந்த பட குழுவினர் அடுத்த கட்டமாக நடக்க வேண்டிய காரியங்களை செய்து வருவதாக கூறப்படுகிறது.  

கலை இயக்குனரின் மறைவுக்கு திரையுலகினார் இரங்கல் தெரிவித்து வருகின்ற வருகின்றனர்.

Edited by Siva