வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sinoj
Last Modified: புதன், 11 அக்டோபர் 2023 (20:01 IST)

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவர் தான்! சம்பளம் ரூ.150 கோடி

ajith-adhik Ravichandran
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கும் படத்தை லகா தயாரிக்கிறது.  அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில்   திரிஷா மற்றும் ரெஜினா கஸாண்ட்ரா ஹீரோயின்களாக இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில்  விடாமுயற்சி ஷூட்டிங் அஸர்பைஜான் நாட்டுக்கு அருகே ஒரு பகுதியில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித்குமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு தோற்றத்திலும், நடிகர் அஜித் குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இப்படத்தை அடுத்து, அஜித்குமார் மார்க் ஆண்டனி என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதனால் அஜித் 63 படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இளம் இயக்குனருடன் அஜித் இணைந்துள்ளதால் இப்படமும் பெரிய பட்ஜெட்டாக இருக்கும் எனவும், இப்படத்தில் நடிக்கர் அஜித்திற்கு ரூ.150 கோடி வரை சம்பளம் பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.