லியோ ரிலீஸ் நாளில் வெளியாகிறதா அஜித்தின் விடாமுயற்சி முதல் லுக்?
அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் நடந்து வருகிறது. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் தொடங்கியுள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க வரும் நிலையில் இன்னொரு கதாநாயகியாக ரெஜினா கஸாண்ட்ரா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அடுத்த வாரம் லியோ படம் ரிலீஸ் ஆகும் அதே நாளில் விடாமுயற்சி முதல் லுக் போஸ்டர் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.