ஷூட்டிங்கில் நடந்த விபத்தையே ஆக்ஷன் காட்சியாக மாற்றியுள்ளோம்… விடாமுயற்சி ஸ்டண்ட் இயக்குனர் கொடுத்த அப்டேட்!
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் குட் பேட் அக்லிஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கி நிறைவடைந்துள்ளது.
படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ரிலீஸ் தேதி குறித்த பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ள போதும், இதுவரை படக்குழு உறுதியாக ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் படம் குறித்து பேசியுள்ளார். அதில் “ படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இயக்குனர் மகிழ் திருமேனி செதுக்கி வருகிறார். படத்தில் இதுவரை நீங்கள் பார்க்காத அஜித்தைப் பார்க்கலாம். எந்த விதமான சமாதானங்களும் செய்துகொள்ளாமல் தீவிரமாக இந்த படத்தை எடுத்து வருகிறோம். ஷூட்டிங்கின் போதே ஒரு விபத்து நடந்தது. ஆனால் அதை ஒரு ஆக்ஷன் காட்சியாக மாற்றி இருக்கிறோம். படம் விரைவில் ரிலீஸாகும்” எனக் கூறியுள்ளார்.