புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 22 நவம்பர் 2024 (08:48 IST)

அஜித்தான் என்னை முதலில் பாராட்டினார்… நெகிழ்ச்சியாகப் பேசிய ஷாம்!

நடிகர் ஷாம் 12 B படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்பாக அவர் விஜய்யின் குஷி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றியிருப்பார். அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஜீவா தன்னுடைய 12 B படத்தில் அவரை அறிமுகப்படுத்த, அந்த படத்தில் அப்போதைய சூப்பர் ஸ்டார் நடிகைகளான ஜோதிகா மற்றும் சிம்ரன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.

அதன் பிறகு சில ஹிட் படங்களில் நடித்த ஷாம், அதன் பின்னர் சறுக்கி இப்போது இருக்குமிடம் தெரியாமல் இருக்கிறார். அவர் கடைசியாக விஜய்யின் வாரிசு மற்றும் கோலி சோடா 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் தன்னை முதல் முதலாக பாராட்டியது அஜித்தான் என்று கூறியுள்ளார்.

அதில் “12  B படம் வந்த போது குமுதம் பத்திரிக்கையில் அஜித் சார் கொடுத்த நேர்காணலில் என் நடிப்பைப் பாராட்டிப் பேசினார். என்னை சந்திக்க விருப்பப்படுவதாகவும் கூறினார். நான் அவரைத் தேடிப் போய் பார்த்தபோது என்னிடம் “சூப்பர்ப்பா..  சிம்ரன், ஜோதிகா மாதிரி முன்னணி நடிகைகள் இருந்தும் உன் நடிப்பு பிரமாதம்.” என்று சொல்லி பாராட்டினார். சினிமாவில் இருந்து என்னை முதலில் பாராட்டியது அஜித் சார்தான்.