புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 17 அக்டோபர் 2019 (07:55 IST)

வெற்றிமாறனுடன் கைகோர்த்த சிம்பு தயாரிப்பாளர் – ஹிரோ …?

அசுரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறன்ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் நிறுவனத்துக்கு ஒரு படம் இயக்க ஒத்துக்கொண்டுள்ளார்.

தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், அபிராமி அம்மு, டிஜே ஆகியோர் நடிப்பில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி வெளியானது அசுரன் திரைப்பரம். எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக திரைக்கதை அமைத்து இந்தப் படத்தை இயக்கியிருந்தார் வெற்றிமாறன். இப்படம் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாக ஓடி 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதால் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக வெற்றிமாறன் ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் நிறுவனத்தின் எல்ரெட் குமாரோடு கைகோர்த்துள்ளார். இந்த நிறுவனம் சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா, கோ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளது. வெற்றிமாறன் சூரியைக் கதாநாயகனாக வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாகக் கூறியுள்ள நிலையில் அந்த படத்தைதான் எல்ரெட் குமார் தயாரிக்கப் போகிறாரா அல்லது வேறுபடமா என்ற தகவல் வெளியாகவில்லை.