ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2019 (18:15 IST)

துப்பாக்கி, தெறியை விட அசுரன் அதிக லாபம் – மனம்திறந்த தயாரிப்பாளர் !

தனுஷ் நடிப்பில் அக்டோபர் 11 ஆம் தேதி வெளியான அசுரன் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது.

தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், அபிராமி அம்மு, டிஜே ஆகியோர் நடிப்பில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி வெளியானது அசுரன் திரைப்பரம். எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக திரைக்கதை அமைத்து இந்தப் படத்தை இயக்கியிருந்தார் வெற்றிமாறன்.  இந்தப் படத்தை பிரம்மாண்டமான படைப்புகளை பிரபல நடிகர்களை வைத்து தயாரிக்கும் கலைப்புலில் எஸ் தானு தயாரித்திருந்தார்.

இந்தப் படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிபடுத்தும் விதமாக தயாரிப்பாளர் தானு அளித்த நேர்காணல் ஒன்றில் தான் தயாரித்த துப்பாக்கி மற்றும் தெறி படங்களை விட அதிக லாபத்தை அசுரன் கொடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.