வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 24 டிசம்பர் 2018 (10:31 IST)

பேட்ட படத்தில் ரொம்ப பிடித்த ஷாட்..! ரஜினி இயக்குனர் பதிவு!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகிய பேட்ட படத்தில் அவருக்கு மிகவும் பிடித்த ஷாட் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


 
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் பேட்ட. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர்.
 
படத்தின் ஒட்டுமொத்த பாடல்கள் 9-ம் தேதி வெளியாகி இணையத்தில் அனைவரையும் ஈர்த்து வருகிறது. இப்படத்தின் டீசர் டிசம்பர் 12-ம் தேதியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளன்று வெளியாகி பட்டய கிளப்பியது . இதனை அடுத்து பேட்ட படத்தின் ட்ரைலர் 2019 புத்தாண்டு அன்று மாலை வரும் என்று பேசப்பட்டு வருகிறது.


 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் இயக்குனரான கார்த்திக் சுப்பராஜ், பேட்ட படத்தில் தனக்கு மிகவும் பிடித்த ஷாட் குறித்து பதிவு செய்தார். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகை சிம்ரனுடன் வருவது போன்ற புகைப்படம் நேற்று வெளியானது. ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட அந்த ஷாட் தான் இயக்குனருக்கும் பிடித்துள்ளதாம்.
 
உலகிலேயே இத்தனை வயதில்,  வித்யாசமான ஸ்டைலுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் திறன் சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமே உள்ளது என்பதை இந்த ஒரு புகைப்படத்தை பார்த்தாலே தெரிகிறது.