செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2022 (15:26 IST)

வெந்து தணிந்தது காடு படத்தில் பல இடங்களில் கெட்டவார்த்தை வசனங்கள்… கட் பண்ணிய சென்சார்!

வெந்து தணிந்தது காடு திரைப்படம் நாளை முதல் உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது.

மாநாடு திரைப்படத்துக்கு பிறகு சிம்பு நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

நாளை வெளியாகும் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை முன்னணி விநியோகஸ்தரான சிபுதமீன்ஸ் பெற்றுள்ளார். இதுபோல அந்தந்த மொழிகளின் முன்னணி நிறுவனங்கள் படத்தை வெளியிடுகின்றன.

இந்நிலையில் படம் சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்ட நிலையில் பல இடங்களில் இடம்பெற்றிருந்த கெட்ட வார்த்தை வசனங்கள் ம்யூட் செய்யப்பட வேண்டும் என சென்சார் பரிந்துரை செய்துள்ளது. இந்த வசனங்கள் ம்யூட் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளன.