1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2022 (13:55 IST)

வெந்து தணிந்தது காடு படத்துக்கு தடை கோரிய வழக்கால் பரபரப்பு!

Vendhu
சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் நாளை ரிலீசாக இருக்கும் நிலையில் இன்று திடீரென இந்த படத்திற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
நடிகர் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்ந்த தயாரிப்பு நிறுவனத்துடன் சமரசம் செய்து கொள்வதாக இயக்குனர் கவுதம் மேனன் தரப்பில் உத்தரவாதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
இதனை அடுத்து இந்த உத்தரவாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளதால் வெந்து தணிந்தது காடு திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது
 
சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகிய இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது