1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (13:27 IST)

’வல்லவன்’ படத்திற்கு பின் சிம்பு இயக்கும் படம்: ஹீரோ யார் தெரியுமா?

Simbu
சிம்பு நடித்து இயக்கிய வல்லவன் என்ற திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான நிலையில் தற்போது 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சிம்பு நயன்தாரா ரீமாசென் உட்பட பலர் நடிப்பில் உருவான வல்லவன் திரைப்படத்தை சிம்பு இயக்கியிருந்தார். இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது சிம்பு ஒரு அதிரடி ரொமான்ஸ் கதையை எழுதி உள்ளதாகவும் அந்த படத்தை அவரே இயக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் மட்டும் சிம்பு நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் இளம் நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் சிம்பு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது 
 
16 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சிம்பு ஒரு படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.