வெந்து தணிந்தது காடு படத்தின் பெயருக்கு சிக்கல்… அதே பெயரில் வேறொரு படம்!
சிம்பு நடிப்பில் உருவாக உள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.
கௌதம் மேனன் – சிலம்பரசன் காம்போவில் முன்னதாக விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் ஹிட் அடித்த நிலையில் அடுத்து இருவர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, வேல்ஸ் ப்லிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இந்தபடத்தின் பர்ஸ்ட் லுக் உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஆனால் அதே பெயரில் ஈழத்தமிழரான மதி சுதா என்பவர் ஒரு படத்தை எடுத்து முடித்து வியாபார வேலைகளை எல்லாம் தொடங்கிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியானதால் பிஸ்னஸ் வேலைகள் பாதிக்கபப்ட்டுள்ளதாக புகார் கூறி வருகிறாராம். இணையத்திலும் அவருக்கு ஆதரவாக குரல்கள் எழுந்துள்ளன.