கௌதம் மேனன் படத்துக்காக எடை குறைத்த சிம்பு! – எத்தனை கிலோ தெரியுமா?
கௌதம் மேனனின் “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடிப்பதற்காக பல கிலோ எடையை குறைத்துள்ளார் சிம்பு
கௌதம் மேனன் – சிலம்பரசன் காம்போவில் முன்னதாக விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் ஹிட் அடித்த நிலையில் அடுத்து இருவர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, வேல்ஸ் ப்லிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியான நிலையில் சிம்பு கெட்டப் பார்த்து பலரும் அதிர்ச்சிக்குள்ளானர்கள். அந்த அளவுக்கு உடலை குறைத்து வேறு நபராக மாறியிருந்தார். இந்த படத்திற்காக கடந்த 6 மாதத்திற்குள்ளாக சுமார் 15 கிலோ எடையை சிம்பு குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முழு மூச்சாக படத்திற்காக சிம்பு தன்னை அர்ப்பணித்து கொள்வது சிம்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.