புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 5 மே 2020 (20:09 IST)

எனக்கும் ஸ்டாக் தீர்ந்துபோச்சு... ஓப்பனாக சொன்ன இயக்குனர் வெங்கட் பிரபு...!

மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் குடி பிரியர்கள் கூட்டம் கூட்டமாக கடை முன்பு அலைமோதுவது , நீண்ட வரிசையில் காத்திருந்து ஆயிரக்கணக்கில் சரக்கு வாங்கி செல்வது உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கினால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் மது கிடைக்காமல் திண்டாடி வந்தனர். இந்நிலையில் தற்போது ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மதுக்கடைகள் முன்பு மது பிரியர்கள் கூட்டமாய் குவிவதால் சமூக இடைவெளியை பேணுவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், வீடியோக்களை பார்த்தால், அனைத்து மதுக் கடைகளும் இன்று முதல் கொரோனாவுக்கு சேவை செய்யத் தொடங்கின என்று தோன்றுகிறது. உங்களிடம் ஸ்டாக் இருக்கும்... ஏழை மக்கள் என்ன செய்வார்கள் ? என என்னைப்பார்த்து  சிலர் சொல்வார்கள் என்று எனக்கு தெரியும். உண்மையை சொல்லப்போனால் எனக்கும் ஸ்டாக் தீர்ந்து பல நாள் ஆச்சு. பாதுகாப்பு தான் முக்கியம். என கிண்டலாக உண்மைத்துவதுடன் பதிவிட்டுள்ளார்.