வசந்தபாலன் படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் தாஸ்!
நடிகர் அர்ஜுன் தாஸ் வசந்தபாலன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
இயக்குனர் வசந்தபாலன் தனது பள்ளி நண்பர்கள் 25 பேருடன் சேர்ந்து ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்க உள்ளார் வசந்தபாலன். இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தை அவரே இயக்கவும் உள்ளார். அந்த படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் தாஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் கவனத்தை ஈர்த்த நிலையில் அவர் கதாநாயகனாக நடித்த அந்தகாரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் கவனத்தைப் பெற்றது. இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய ஜெயில் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.