ரீமேக் படம் இயக்குகிறேனா? இயக்குனர் வசந்தபாலன் விளக்கம்!
இயக்குனர் வசந்த பாலன் தற்போது ஜி வி பிரகாஷ் இசையில் ஜெயில் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
ஆல்பம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்தபாலன். அதன் பிறகு அவர் இயக்கிய வெயில் மற்றும் அங்காடித் தெரு ஆகிய படங்கள் பெரிய அளவில் கவனம் பெற்றன. ஆனால் அதற்குப் பின்னர் அவர் இயக்கிய அரவான் மற்றும் காவியத்தலைவன் ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்தன.
அதனால் அவருக்கு அடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து அவர் இப்போது ஜி வி பிரகாஷ் நடிப்பில் ஜெயில் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதையடுத்து தனது அடுத்த படத்துக்கான பணிகளை இப்போது ஈடுபட்டுள்ளார். இந்த படத்தைப் பற்றி இப்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளியான லிஃப்ட் பாய் திரைப்படத்தைதான் அவர் ரீமேக் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆனால் அந்த தகவலை மறுத்துள்ளார் வசந்தபாலன். இது குறித்து டிவிட்டரில் பல முக்கியமான இணையதளங்களில் நான் இந்தியில் வெளியான தி லிஃப்ட் பாய் திரைப்படத்தை ரீமேக் செய்யப்போவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. அது முற்றிலும் தவறான தகவல் என விளக்கமளித்துள்ளார்.