வாரிசு ஷூட்டிங்குக்காக சென்னையில் முகாமிடும் படக்குழு…. வெளியான லேட்டஸ்ட் தகவல்!
விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படத்தின் ஃப்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியானது. சமூகவலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது போலவே படத்துக்கு வாரிசு என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்போது வாரிசு படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் முழுப் படக்குழுவும் முகாமிட்டுள்ளது. படத்தின் முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்பட உள்ளதாகவும், படத்தில் இடம்பெறும் முக்கியமானக் கதாபாத்திரங்கள் அனைத்தும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.