திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 7 ஜூலை 2020 (07:42 IST)

உண்மையான அப்பா இல்லாத அனைவருக்கும்... வனிதாவின் உணர்ச்சி மிகுந்த பதிவு

உண்மையான அப்பா இல்லாத அனைவருக்கும்.
சமீபத்தில் வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம் நடந்தது என்பதும் இந்த திருமணம் சர்ச்சையானது என்பதும் பீட்டர் பால் முதல் மனைவி எலிசபெத் அதிரடியாக பேட்டி அளித்து இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தன்மீதான சர்ச்சைக்குரிய விமர்சனங்களுக்கு அவ்வப்போது அதிரடியாக பதிலளித்து வரும் வனிதா விஜயகுமார், அதே நேரத்தில் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தெரிகிறது 
 
குறிப்பாக பீட்டர் பால், வனிதாவின் குழந்தைகளுடன் நெருக்கமாகி உள்ளதாகவும் உண்மையான அப்பா போன்று அவர் வனிதாவின் மகள்களிடம் பாசத்தைக் காட்டி வருவதாகவும் தெரிகிறது. வனிதாவின் குழந்தைகளும் பீட்டரை தனது அப்பாவாக ஏற்றுக் கொண்டதாக சில புகைப் படங்கள் நிரூபிக்கின்றன
 
பீட்டர் பால் மடியில் வனிதாவின் குழந்தை படுத்திருப்பது போன்றும் இருவரும் அப்பா மகள் உறவில் ஒன்றிப்போய் இருப்பது போன்றும் வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். உண்மையான அப்பா இல்லாத அனைவருக்கும் இந்த புகைப்படம் சான்று என்றும் வனிதா அதில் குறிப்பிட்டுள்ளார். வனிதாவின் இந்த சமூக வலைதள பதிவுகள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
உண்மையான அப்பா என்பது வேறு, பாசத்தை காட்டும் அப்பா என்பது வேறு. ஒரு நல்ல அப்பா ஒரு நல்ல அம்மாவுக்கு சமம். ஒரு நல்ல அம்மா அனைத்துக்கும் சமம் என்றும் வனிதா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். வனிதாவின் இந்த உணர்ச்சிமிக்க பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

To all those who never had a real dad...

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A biological father is different ..a daddy is different...a daddy is mom..a mom is everything

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on