வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 15 ஜூலை 2019 (08:00 IST)

நான் எதிர்பார்க்கவே இல்லை: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வனிதா

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று யாரும் எதிர்பாராத வகையில் வனிதா வெளியேற்றப்பட்டார். வனிதா வெளியேறினால் பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகளே இருக்காது, அதனால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்துவிடும், அதனால் வனிதா வெளியேற வாய்ப்பே இல்லை என்று பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டபோதிலும், மொத்த வாக்குகளான சுமார் 12 கோடியில் வனிதா மிகக்குறைவான வாக்குகளே பெற்றதால் அவரை பிக்பாஸ் வெளியேற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.
 
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி கமல்ஹாசனிடம் வனிதா பேசியபோது, 'நான் நல்லாத்தானே கொலையெல்லாம் செஞ்சேன், நான் இதை எதிர்பார்க்கவே இல்லை என்று கூறிய வனிதா, நான் நானாகவே இயல்பாக இருந்தேன். நான் இந்த வீட்டில் நடிக்கவே இல்லை. அதனால் தான் மக்கள் வெளியேற்றியிருக்கலாம்' என்று கூறினார்
 
மேலும் மற்ற போட்டியாளர்களுக்கு அவர் அறிவுரையாக கூறியபோது, 'நீங்கள் நீங்களாகவே இருங்கள், மக்கள் என்ன நினைக்கின்றார்கள், மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதை யோசிக்கவே வேண்டாம். உங்கள் மனதுக்கு சரி என்று பட்டதையே செய்யுங்கள். என்று கூறினார்.
 
வனிதா வெளியேறியபோது அவருடைய மூன்று நெருங்கிய தோழிகளான சாக்சி, ஷெரின் மற்றும் ரேஷ்மா ஆகிய மூவரும், மோகன் வைத்யாவும் மட்டும் கவலையுடன் இருந்தனர். மதுமிதா, லாஸ்லியா உள்பட அனைவருக்கும் உள்ளுக்குள் மிகுந்த சந்தோஷம் என்பது அவர்களுடைய முகத்தில் இருந்து தெரிந்தது