புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (11:07 IST)

1.25 கோடி கேட்கும் லஷ்மிராமகிருஷ்ணன்… பதிலுக்கு 2.5 கோடி கேட்கும் வனிதா – மாறி மாறி நோட்டீஸ்!

வனிதா திருமண விவகாரத்தில் காரசாரமாகப் பேசிக்கொண்ட லஷ்மி ராமகிருஷ்ணனும் வனிதாவும் மாறி மாறி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றனர்.

வனிதா மற்றும் பீட்டர்பால் மூன்றாம் திருமணம் அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து தற்போது இந்த விவகாரம் குறித்து தேவையில்லாமல் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் கஸ்தூரி போன்றவர்கள் மூக்கை நுழைத்து கருத்து சொல்கிறேன் என்று வனிதாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டனர். ஒரு லைவ் நேர்காணலில் வனிதா மற்றும் லஷ்மி ராமகிருஷ்ணன் ஆகிய ஆபாசமாக பேசிக்கொண்டனர்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி காட்டுத்தீ போல் பரவி வைரலானது. ஒரு சாரார் வனிதாவுக்கும் மற்றொரு சாரார் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் ஆதரவாக பேசினர். இந்நிலையில்  வனிதாவுக்கு 1.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் லஷ்மிராமகிருஷ்ணன். அதையடுத்து தேவையில்லாமல் என் திருமண விஷயத்தில் லஷ்மி ராமகிருஷ்ணன் தலையிட்டு பேசி வருகிறார். இதனால் தனக்கு 2.5 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தரவேண்டும் என வனிதா பதில் நோட்டிஸ் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.