இதென்னடா பாகுபலிக்கு வந்த சோதனை... ராஜமாதா சிவகாமி தேவியாக மாறிய வனிதா!

Papiksha Joseph| Last Modified வியாழன், 30 ஜூலை 2020 (08:05 IST)

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான விஜயகுமாரின் மகள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சொத்து பிரச்னையியல் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆன வனிதாவிற்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது தான் அவரது genuine ஆன கேரக்டர் பலருக்கும் தெரியவந்தது. பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியேறிய வனிதாவுக்கு மீண்டும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்தனர். அந்த நிகழ்ச்சியின் டைட்டில் கார்ட் வின்னராக வனிதா அறிவிக்கப்பட்டார்.

இதயடுத்து சொந்தமாக வனிதா புதிய யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதில் மேக்கப் ,சமையல் உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் நல்ல ரீச் செய்துவிட்டார். வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் தன் தலையில் தானே மிளகாய் அரைத்துக்கொள்ளும் விதமாக மூன்றாம் திருமணம் செய்துகொண்டு விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ராஜமாதா சிவகாமி தேவி என்று கேப்ஷன் கொடுத்து பாகுபலி ரம்யா கிருஷ்னனின் சிவகாமி தேவி கெட்டப்பில் கலக்கப்போவது யாரு செட்டில் எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த எல்லோரும் " இது அந்த சிவகாமி தேவிக்கே அசிங்கம்" என்றெல்லாம் செம கடுப்பில் கலாய்த்து திட்டியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :