அபார்ட்மெண்ட்டில் குடியிருப்பவர் வனிதா மீது புகார் - காரணத்துடன் வீடியோ வெளியிட்ட நாஞ்சில் விஜயன்!

Papiksha Joseph| Last Updated: புதன், 29 ஜூலை 2020 (10:27 IST)

நடிகை வனிதா மற்றும் அனிமேஷன் இயக்குநர் பீட்டர்பால் ஆகிய இருவரும் கடந்த ஜூன் 27ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். வனிதாவின் மூன்றாம் திருமணம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

திருமணம் முடிந்த அடுத்த நாளே பீட்டர் பால் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். தனது கணவர் பீட்டர்பால் தனக்கு விவாகரத்து அளிக்காமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த விவகாரத்தை அடுத்து வனிதாவின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதில் முக்கியமான நபர்கள் சூர்யா தேவி , நாஞ்சில் விஜயன் , கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் இவர்கள் அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் வனிதா விவாகரத்தில் சிக்கி சின்னாபின்னமாகினர். வனிதா தன்னை விமர்சித்த ஒருவரையும் விட்டு வைக்காமல் நேரடியாக திட்டி தீர்த்தார். நாளும் இந்த விவகாரத்திற்கு ஒரு எண்டு பாயிண்டே இல்லாமல் போகிறது.


இந்நிலையில் தற்ப்போது வனிதா குடியிருக்கும் அப்பார்ட்மென்டில் வசிக்கும் நபர் ஒருவர் கொரோனா காலத்தில் முறையாக அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தியதாக கூறி குடியிருப்பின் பொது செயலாளர் நிஷா காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்படி வனிதா மீது போரூர் போலீசார்
மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவை நாஞ்சில் விஜயன் இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டு " வெய்ட் அண்ட் சி " என நக்கலடித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :