திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (09:16 IST)

’வலிமை’ வில்லன் நடிகருக்கு நிச்சயதார்த்தம்: புகைப்படம் வைரல்!

’வலிமை’ வில்லன் நடிகருக்கு நிச்சயதார்த்தம்: புகைப்படம் வைரல்!
தல அஜித் நடித்துள்ள ’வலிமை’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதை அத்து அது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது
 
தல அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ’வலிமை’ திரைப்படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து வருபவர் கார்த்திகேயா. இந்த நிலையில் நடிகர் கார்த்திகேயா கடந்த 11 ஆண்டுகளாக காதலித்த பெண்ணை கரம் பிடிக்க இருக்கிறார். இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறி அது குறித்த புகைப்படத்தையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்
 
மேலும் கடந்த 2010ஆம் ஆண்டு தனது காதலியுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த இரண்டு புகைப்படங்களும் இப்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
’வலிமை’ திரைப்படத்தில் அஜித்துக்கு இணையாக மிரட்டல் வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளதாகவும் இந்த படம் அவருக்கு தமிழ் திரை உலகில் மிகப்பெரிய திருப்புமுனையை தரும் என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும் காதலித்த பெண்ணை கைபிடிக்க இருக்கும் கார்த்திகேயாவுக்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.