’’வலிமை’’ பட பாடலை எழுதிய நயன்தாராவின் காதலர்!!
வலிமை படத்தில் ஒரு பாடலை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இப்பாடல் தான் இன்றிரவு வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்திற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருந்த சூழலில் சமீபத்தில் வலிமை ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த படம் ஆயுத பூஜை பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.. இந்த நிலையில் இன்று இரவு வலிமை படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக தகவல்கள் கூறுகிறது. இதனை கொண்டாட தல ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது வலிமை பட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், வலிமை படத்தின் முதல் சிங்கில் பாடலுக்கு ரெடியாகுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அவரது தனது டுவிட்டை இயக்குநர் ஹெச் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் விக்னேஷ் சிவனுகு டேக் செய்துள்ளார், அதனால் இப்பாடலை விக்னேஷ் எழுதியிருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அதேபோல் நடிகர் அஜித்குமார் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆகிறது எனவே இதையொட்டியும் அவர் #30YearsOfAjithKumar என்ற ஹேஸ்டேக் பதிவிட்டுள்ளார். இதையொட்டி இன்று வலிமை பட பாடல் ரிலீஸாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.