செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 7 ஆகஸ்ட் 2021 (11:01 IST)

வலிமை பாடலுக்காக ஒரிசாவில் இருந்து வந்த இசைக்கலைஞர்கள்!

படத்தின் நாங்க வேற மாரி என்ற பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அஜித் நடித்த வலிமை படத்தின் சிங்கிள் பாடலான நாங்க வேற மாதிரி என்ற பாடல் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்த பாடல் மிகப்பெரிய அளவில் அஜித் ரசிகர்களால் இணையதளத்தில் பகிரப்பட்ட நிலையில் ஏராளமானோர் இந்த பாடலை பார்த்து வருகின்றனர். ஆனால் சமூகவலைதளத்தில் உள்ள பொதுவான ரசிகர்கள் இந்த பாடல் மிகவும் சுமாராக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்த பாடலுக்கு ட்ரம்ஸ் வாசிப்பதற்காக ஒரிசாவில் இருந்து ட்ரம்ஸ் கலைஞர்களை வரவழைத்து வாசிக்க வைத்ததாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.