1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (16:26 IST)

சன் பிக்சர்ஸ் வலையில் சிக்காத கமல் & அஜித்!

தமிழ் சினிமாவில் உள்ள எல்லா முன்னணி நடிகர்களும் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் படங்களில் நடித்து வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாகியுள்ளது. அதிலும் சன் பிக்சர்ஸ் மற்றும் லைகா ஆகிய இரு நிறுவனங்களும் முன்னணியில் உள்ளன. இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய எல்லா முன்னணி நடிகர்களும் ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். அதனால் அடுத்த ஆண்டு முழுவதும் திரையரங்குகளில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படங்கள் மாதத்துக்கு ஒன்றாக ரிலீஸாகும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் சன் பிக்சர்ஸ் வலையில் கமல் மற்றும் அஜித் ஆகிய இரு நடிகர்கள் மட்டும் இன்னும் சிக்கவில்லை. கமல் கூட லைகாவுக்கு இந்தியன் 2 வில் நடித்து வருகிறார். ஆனால் அஜித் மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களின் படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.