1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (17:06 IST)

’வலிமை’ சிங்கிள் பாடலை உறுதி செய்த ஜான்வி கபூர்!

தல அஜித் நடித்த ’வலிமை’ படத்தின் சிங்கிள் பாடல் இன்று இரவு 10 மணிக்கு வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில் தயாரிப்பாளர் போனி கபூரின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார் 
 
நடிகை ஜான்வி கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’வலிமை’ படத்தின் சிங்கிள் பாடலை ரசிக்க தயாராகுங்கள் என்று பதிவு செய்துள்ளார். இதனையடுத்து இன்று ’வலிமை’ படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
மேலும் இந்த பாடலை அனிருத் மற்றும் அனுராக் ஆகிய இருவரும் இணைந்து பாடியிருப்பதாகவும்,  ’இது வேற மாதிரி’ என்று இந்த பாடல் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
 
மேலும் இந்த பாடலை பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பாடலை எதிர்பார்த்து அஜித் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் காத்திருப்பதால் இந்த பாடல் வேற லெவல் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே சமீபத்தில் வெளியான ’வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே