செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 15 மார்ச் 2021 (15:53 IST)

அஜித்துக்கு வில்லனாக நடிப்பது ஏன்? இரண்டு நடிகர்களை உதாரணம் காட்டும் கார்த்திகேயா!

வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. இந்த படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேஷியும் வில்லனாக நடிகர் கார்த்திகேயாவும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிப்பது ஏன் என்பது குறித்து கார்த்திகேயா விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘இப்போதெல்லாம் வில்லன் கதாபாத்திரங்களும் ரசிகர்கள் ரசிக்கத் தொடங்கியுள்ளனர். நான் ஈ சுதீப் மற்றும் மாஸ்டர் பவானி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களையும் முன்னோடியாக வைத்துதான் இந்த படத்தில் நடிக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.