திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வெள்ளி, 15 ஜனவரி 2021 (10:08 IST)

பிரதமர் மோடியின் சுட்டுரையை வரவேற்கிறோம்: வைரமுத்து டுவீட்

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்திற்கு மறுநாள் மாட்டுப் பொங்கலாகவும் திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. திருவள்ளுவர் தினத்தில் தமிழகம் முழுவதும் உள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். மேலும் அன்றைய தினம் திருவள்ளுவர் குறித்த அருமை பெருமைகளையும் தலைவர்கள் பதிவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்த வகையில் கவியரசு வைரமுத்து அவர்கள் இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதுமட்டுமின்றி தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் குறித்த ஒரு ட்வீட்டை பதிவு செய்து அதில் இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும் எனும் பிரதமர் மோடியின் உரையை வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது
 
இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்னும் பிரதமர் மோடியின் சுட்டுரையை வரவேற்கிறோம். தேசிய நூலாகத் திருக்குறளை அறிவிக்க இதுவே தக்க தருணம் என்றும் தெரிவிக்கிறோம்.
 
திருவள்ளுவர் திருநாளில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தோம்’ என வைரமுத்து டுவீட் செய்துள்ளார்