மீண்டும் திருவள்ளுவருக்கு காவிச்சாயம்: தங்கம் தென்னரசு கண்டனம்!
தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கும் காவி சாயம் பூசப்பட்ட பிரச்சனை கடந்த சில மாதங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் அதே பிரச்சனை எழுந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் சமீபத்தில் ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் குறித்த ஒளிபரப்பில் திருவள்ளுவர் புகைப்படத்திற்கு காவியுடை பொருத்தப்பட்டிருந்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
திருவள்ளுவரின் உடையில் காவி சாயம் பூசப்பட்டதற்கு முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.அவர் இதுகுறித்து கூறியதாவது. எவராக இருப்பினும் இந்த செயலை செய்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இத்தகைய செயல்கள் வருங்காலத்தில் நடைபெறாது தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் தமிழ் பற்று மிக்க எவராலும் எக்காலத்திலும் இதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அதே சர்ச்சை கிளம்பி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது