என்னை நடிக்கவிடாமல் பூட்டுப்போட்டு சாவியை எடுத்து சென்றுவிட்டார்கள்… வடிவேலு பேச்சு!
ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் சந்திரமுகி 2 படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மரகதமணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.
இந்த படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் வடிவேலு “சிறிது நாட்களுக்கு முன்னால் என்னை நடிக்க வரவிடாமல் கதவை சாத்தி பூட்டிவிட்டு சாவியை எடுத்து சென்றுவிட்டார்கள். சினிமாவில் நடிக்க உனக்கு தகுதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அந்த கதவை உடைத்து புது சாவியை கொடுத்து வாழ்க்கையை தொடங்கி வைத்தார் சுபாஷ்கரன்.
அவரைதான் நான் தெய்வத்துக்குப் பிறகு தெய்வமாக வணங்குகிறேன். சந்திரமுகி இரண்டாம் பாகத்திலும் முதல் பாகத்தில் வந்த முருகேசனாகதான் வருகிறேன்.” எனக் கூறியுள்ளார்.