வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 26 ஆகஸ்ட் 2023 (19:21 IST)

ராகவா லாரன்ஸின் தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை

ragava lawrence
நடிகர் ராகவா லாரன்ஸின் தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை  வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் 'லைகா' சுபாஸ்கரன்.

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சந்திரமுகி -2. இப்படத்தில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மரகதமணி இசையமைக்கிறார்.  இவரது இசையில், ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

எனவே  நேற்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில்  இப்படத்தில் நடித்த கலைஞர்கள், மற்றும் தயாரிப்பாளார் லைகா சுபாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், நடிகர் ராகவா லாரன்ஸின் தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை  வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் 'லைகா' சுபாஸ்கரன்.

அவரது செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.