இழுத்துக் கொண்டே செல்லும் வாடிவாசல்… தயாரிப்பாளர் தாணு எடுத்த அதிரடி முடிவு!

சூர்யா பிறந்த நாளில் ‘வாடிவாசல்’ ஃபர்ஸ்ட்லுக்
சூர்யா பிறந்த நாளில் ‘வாடிவாசல்’ ஃபர்ஸ்ட்லுக்
Last Modified சனி, 23 ஜனவரி 2021 (16:36 IST)

வாடிவாசல் படத்தை 2022 ஆம் ஆண்டுதான் தயாரிப்பாளர் தொடங்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் பல சர்ச்சைகளுக்குப் பிறகு தீபாவளிக்கு ஓடிடியில் ரிலிஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் அடுத்து அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் இப்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார். அதற்கடுத்தும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.

அதே போல வெற்றிமாறனும் இப்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த இரு படங்களும் முடிந்த பின்னரே வாடிவாசல் ஆரம்பிக்கும் என சொல்லப்பட்ட நிலையில் இப்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளாராம். இதனால் வாடிவாசல் திரைப்படத்தை பொறுமையாக 2022 ஆம் ஆண்டு தொடங்கிக் கொள்ளலாம் என்ற முடிவை தாணு எடுத்துள்ளாராம்.இதில் மேலும் படிக்கவும் :