முழுப்படத்தையும் ஐபோனிலேயே எடுக்கும் வெற்றிமாறன் – ஆச்சர்யத்தில் கோலிவுட்!

Last Modified வியாழன், 21 ஜனவரி 2021 (16:52 IST)

இயக்குனர் வெற்றிமாறன் தனது அடுத்த படத்தை முழுவதும் செல்போன் கேமிராவிலேயே படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் வெற்றிமாறன் அசுரன் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்கள் பட்டியலிலும் குறிப்பிடத்தகுந்த இடத்தை பிடித்துள்ளார். இப்போது அவரின் சம்பளமும் சில கோடிகள் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் வெற்றிமாறன் அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கும் விதமாக ஒரு முழுப்படத்தையும் செல்போனிலேயே எடுக்கப் போகிறாராம். இந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :