தியேட்டரில் 100% இருக்கையை தவிர்க்கவும்: தமிழகத்திற்கு அமெரிக்க பேராசிரியர் எச்சரிக்கை
தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு நேற்று அனுமதி அளித்து அரசாணை வெளியானது என்பது தெரிந்ததே. இந்த அரசாணை காரணமாக வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் தமிழகத்தில் 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர் திறப்பு குறித்து அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக தொற்று நோய்கள் துறை தலைவர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் சினிமா தியேட்டர்கள் குறைவான காற்றோட்டத்துடன், அதிக நெரிசல் இருக்கும் என்றும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழுமையான கட்டுப்பாடு இல்லாமல் தியேட்டர்களை தொடங்குவதை நினைக்கும்போதே அச்சமாக இருக்கிறது என்றும் இதனை தவிர்க்கவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்
ஏற்கனவே 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ளதற்கு திரையுலகினரே ஒரு சிலர் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ள நிலையில் போது அமெரிக்காவில் உள்ள பேராசிரியர் ஒருவரும் இதே கருத்தை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது