செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 ஜனவரி 2021 (10:26 IST)

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் கொரோனா! – புதைக்க இடம் இல்லாம காத்திருக்கும் உடல்கள்!

அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் இறந்த உடல்களை புதைக்க இடம் இல்லாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா பல நாடுகளிலும் கோடிக்கணக்கான உயிர்களை பலி வாங்கி வருகிறது. உலக நாடுகளில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஐரோப்பாவில் பரவிய வீரியமிக்க கொரோனா பாதிப்பு அமெரிக்காவிலும் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பரவ தொடங்கியபோதே மூன்று வகையான மாற்றம் கண்ட கொரோனா வைரஸ்கள் உலகம் முழுவதும் ஏற்கனவே பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க இடம் பற்றாக்குறை நிலவுவதால் நாள்கணக்கில் உடல்கள் காத்து கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.