வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 ஜனவரி 2021 (10:48 IST)

அமெரிக்கா செல்லும் ரஜினி… அப்போ அண்ணாத்த ஷூட்டிங்?

நடிகர் ரஜினிகாந்த் தனது உடல் நலப் பரிசோதனைகளுக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியல் வருகை இல்லை என்று அறிவித்துள்ளார். அதற்கு எழுந்த எதிர்வினைகள் அவருக்கு மனச்சோர்வை உண்டாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் சில காலம் ஓய்வு எடுக்கலாம் எனக் கருதி அமெரிக்கா செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளதால் அது சம்மந்தமான சில பரிசோதனைகளும் செய்யப்பட உள்ளதாம்.

இதையடுத்து அவர் அமெரிக்கா சென்று சிகிச்சைகளை முடித்துக் கொண்டு எப்போது திரும்புகிறாரோ அப்போதுதான் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கப்படும் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.