சூப்பர் ஸ்டாரின் 'ஜவான்' பட 2 வது சிங்கில் #Hayyoda பற்றிய அப்டேட்
ஷாருக்கான்-அட்லீ கூட்டணியில் உருவாக்கியுள்ள ஜவான் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கியுள்ள படம் ஜவான். இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி என முன்னணி தமிழ் நடிகர்களும் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் மூலம் இந்தியிலும் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார் அனிருத்.
பாலிவுட்டிற்கு நுழையும் அனிருத்தின் முதல் படம் ஜவான் படம். இதில், சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதால் கூடுதல் கவனம் பெற்றது.
சமீபத்தில், இப்படத்தின் முதல் சிங்கில் வந்த இடம் என் காடு, நீதான் பலியாடு என்ற பாடல் 'டி சீரீஸ்-தமிழ் யூடியூப்' பக்கத்தில் வெளியிடப்பட்டு பல லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.
ஜவான் படம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இந்த நிலையில், ஜவான் படத்தில் ஷாருக்கான்,விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரின் புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. இந்தப் போஸ்டர்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், ஜவான் பட அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் திங்கட்கிழமை ஜாவன் பட 2 வது சிங்கில் ரொமான்டிக் பாடல் வெளியாகும் என்று ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
#Hayyoda என்ற பாடலை விவேக் எழுதியுள்ளார். பிரியா, பாரா ஆகியோர் பாடியுள்ளனர். முதல் சிங்கில் போன்று இப்பாடலும் ரசிகர்களின் வரவேற்பை பெரும் எனக் கூறப்படுகிறது.