1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (16:01 IST)

அடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினி தான்- 'ஜெயிலர்' ரிவியூவில் ரசிகரின் வீடியோ வைரல்

Jailer
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில்,  நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். இப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது.

ரஜினியுடன் இணைந்து  மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன்  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்  நடிப்பில், அனிருத் இசையில்,  சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இன்று வெளியான இப்படம், ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இன்று 9 மணி காட்சி ரிலீஸாகி முதல் காட்சியை பார்த்துவிட்டு வந்த ரசிகர்களிடம் யூடியூபர்கள் மீடியாக்கள், செய்தி நிறுவன செய்தியாளர்கள்  உள்ளிட்ட பலரும் ரிவியூக்கள் கேட்டு வருகின்றனர்.
rajini fan

இந்த நிலையில் 'ஜெயிலர்'படத்தைப் பார்த்துவிட்டு வந்த ரஜினி ரசிகர் ஒருவர், ''ரஜினி வேற லெவல்ல பண்ணியிருக்காரு…ரஜினியை யாருமே அடிச்சிக்க முடியாது. அடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிதான்'' என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்னவே ‘’தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார் ?என்ற போட்டி  நடிகர்களிடையே நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.