1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 9 ஆகஸ்ட் 2023 (08:49 IST)

விஜய்க்கு சூப்பர் ஸ்டார்னு டைட்டில் போடமாட்டேன்… வெங்கட்பிரபு ஓப்பன் டாக்!

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் யார் சூப்பர் ஸ்டார் என்பது குறித்து அதிகளவிலான சர்ச்சைகள் நடந்து வருகின்றன. ரஜினிதான் என்றென்றும் சூப்பர் ஸ்டார் என்றும், விஜய்தான் இப்போதைய சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்கள் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க உள்ள வெங்கட் பிரபுவிடம் இதுபற்றி பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதில் “விஜய்க்கு உங்கள் படத்தில் சூப்பர் ஸ்டார் விஜய் என்று டைட்டில் போடுவீர்களா?” என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த வெங்கட்பிரபு “இல்லை. அவர் எப்போதும் எனக்கு தளபதிதான். அதனால் அவருக்கு தளபதி என்றுதான் டைட்டில் போடுவோம். இந்த படம் அரசியல் படம் இல்லை. மிகச்சிறந்த எண்டர்டெயினராக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.