திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 8 ஜூலை 2022 (10:57 IST)

“அரண்மனைக்குள் ஸ்மார்ட் போன் அனுமதி இல்லை…” கார்த்தியின் ட்வீட்டுக்கு திரிஷா ஜாலி பதில்!

பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்டர்கள் குறித்து கார்த்தி மற்றும் த்ரிஷாவின் ட்வீட்கள் வைரலாகி வருகின்றன.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் வரலாற்று புனைவு படம் “பொன்னியின் செல்வன்”. கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ள நிலையில் நேற்று படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் கதபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் படத்தில் குந்தவையாக நடிக்கும் திரிஷாவின் லுக்கை இப்போது படக்குழு வெளியிட்டுள்ளது. 

இது சம்மந்தமன ட்வீட்டை பகிர்ந்துள்ள நடிகர் கார்த்தி “இளவரசி லைவ் லொகேஷன் அனுப்புங்க. உங்க அண்ணனின் ஓலையை கொடுக்கணும்.” என ஜாலியாக ட்வீட் செய்துள்ளார். நாவலில் வந்தியத் தேவன் கதாபாத்திரம் ஆதித்த கரிகாலனின் ஓலையை குந்தவையிடம் கொடுக்க வருவதுதான் தொடக்கமாக இருக்கும். அதைக் குறிப்பிட்டு நடிகர் கார்த்தி ட்வீட் செய்து இருப்பது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

கார்த்தியின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள த்ரிஷா “ sorry, அரண்மனையில் ஸ்மாட் போன்களுக்கும் ஸ்மார்ட் மனிதர்களிக்கும் அனுமதி இல்லை” எனக் கூறி பதிலளித்துள்ளார். இவர்கள் இருவரின் இந்த ட்வீட்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.