செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 அக்டோபர் 2020 (12:29 IST)

என் வாழ்க்கையை மாற்றிய நாள்… 20 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படத்தைப் பகிர்ந்த த்ரிஷா!

நடிகை த்ரிஷா மிஸ் சென்னை பட்டம் வென்று இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா நாளுக்கு நாள் அழகாகிக் கொண்டே செல்கிறார். இந்நிலையில் அவர் நேற்று தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிதான் அவர் மிஸ் சென்னை அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

அதன் பிறகுதான் அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்து அவர் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக இன்றுவரை திகழ்கிறார். இந்நாளில் தான் மிஸ் சென்னை வென்ற தினத்தை தனது வாழ்க்கையை மாற்றிய நாள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.