திரிஷாவா! சமந்தாவா! ஜெயிக்கப்போவது யாரு?

VM| Last Modified புதன், 26 டிசம்பர் 2018 (09:57 IST)
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் 96. இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. . தெலுங்கு ரீமேக் உரிமையை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு  வாங்கியுள்ளார். முதலில் சமந்தாவுக்கு ஜோடியாக நானி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால்  சர்வானந்த் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள். இவர் எங்கேயும் எப்போதும் தமிழ் படத்தில் நடித்தவர்.
 
தமிழில் திரிஷா நடித்த வேடத்தில் மீண்டும் திரிஷாவையே நடிக்க வைக்க இயக்குனர் பிரேம் குமார் விரும்பினாராம். ஆனால் தயாரிப்பாளர் தில்ராஜுவோ திரிஷாவை விட சமந்தாவுக்கே தெலுங்கில்  மார்க்கெட் அதிகம் என்று கூறி  சமந்தாவை நடிக்க வைக்கலாம் என்று விரும்புகிறாராம். இதனால் தெலுங்கு 96 படத்தை கைப்பற்றுவது யார் என்பதில் திரிஷாவுக்கும் சமந்தாவுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை கைப்பற்றினால் தெலுங்கில் பழைய படி முன்னணி நடிகையாகி விடலாம் என்று திரிஷா நம்பிக்கையில் உள்ளாராம். சமந்தாவும் இந்த படத்தில் நடிப்பதில் ஆர்வமாக உள்ளார். இதனால் த்ரிஷா சமந்தா இடையே 96 படத்தை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :